உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு மக்களை வாட்டி வதைத்தது. தற்போது பாதிப்புகள் குறைந்து இருந்தாலும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்ட போதிலும் உயிரிழப்புகளை தடுக்க முடிந்தது தவிர நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல வகையான கொரோனா வைரசால் மக்கள் தினம்தோறும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு வழிப்பு ஏற்பட்டதும் உடல் வளர்ச்சி தாமதமானதும் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதில் ஒரு குழந்தை பிறந்த 13 மாதங்களில் உயிரிழந்து விட்டது. உயிரிழந்த குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ததில் அதன் மூலையில் கொரோனா வைரஸ் தடயங்கள் கண்டறியப்பட்டது. அதன் காரணமாகவே குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். எனவே கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் இடம் அது பற்றி தெரிவித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.