தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் ஒருபக்கம் பாராட்டுகளைப் பெற்று வந்தாலும், மறுபக்கம் கண்டனங்களும் எழுந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக விவசாய பிரதிநிதிகள் தரப்பில் இருந்தே இந்த விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகளின் கவனத்தை திசைதிருப்ப வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக விவசாய சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விவசாயிகளுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு விளம்பரம் செய்கிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.