அதிமுக முன்பு போல் இல்லை என அமித்ஷாவிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தற்போது திமுகவின் கொள்கைகளையே பேசுகிறது.

இதனால் தேசிய சிந்தனையாளர்கள், திராவிடத்திற்கு எதிரானவர்களின் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காது. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் பிளவால் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாக கூட்டணி விஷயத்தில் கவனம் தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி பாஜக தலைமையில் அமைக்கும் புது கூட்டணியின் மூலம் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். களத்தில் தி.மு.க, பா.ஜ.க என்ற இருமுனைப் போட்டி நிலவும். 2026-ஆம் வருடம் பிரதான எதிர்க்கட்சியாகவும் 2031-ல் ஆளும் கட்சியாகவும் பாஜக உருவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.