SBI வங்கி வழங்கக்கூடிய வீட்டுக் கடன்களானது குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த செயலாக்கக் கட்டணம், அபராதம் இல்லை, தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஓவர் டிராஃப்ட் விருப்பம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது. அதோடு கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டி சலுகைகளும் வழங்கப்படுகிறது. SBI வழக்கமான வீட்டுக் கடனை வாங்க முதல் தகுதி விண்ணப்பதாரர் 18 -70 வயதுக்குட்பட்ட இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் அடையாள அட்டை, பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம், அடையாளம் மற்றும் குடியிருப்புக்கான சான்று, சொத்து ஆவணங்கள், வருமானச் சான்று ஆகிய முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் SBI வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்கோ (அ) வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ விண்ணப்பித்துக்கொள்ளலாம். பொதுவாக நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது சரியான தேர்வாக இருக்கும்.