விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அன்னம்மாள்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் அருளானந்தின் தந்தை மாணிக்கம், அருளானந்தின் அண்ணன் சவரிமுத்து ஆகிய இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது சங்கீதா அன்னம்மாளிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அண்ணம்மாள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அன்னம்மாள் சங்கீதாவிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சங்கீதாவை கைது செய்தனர். இந்நிலையில் விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி சங்கீதாவை பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.