நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கட்சி ஆரம்பிக்கப் போறாரு தம்பி விஜய் அப்படிங்கிறது தெரிஞ்ச செய்தி தான். இப்போது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். அது நல்ல பெயராக உள்ளது.. ‘தமிழக வெற்றி கழகம்’ என்பது.. எங்கள மாதிரி ஆளுங்களுக்கு என்னன்னா திராவிடம் என்கிற அந்த பெயரே  இல்லாதது பெரிய மகிழ்ச்சி தான்..

பெரிய வெற்றி தான்.. நல்ல பெயர் தான். தமிழக வெற்றி கழகம் என்பது நல்ல பெயர். நான் வாழ்த்துகிறேன். என் தம்பிக்கு வாழ்த்து, அவர் கூட இருக்கின்ற தொண்டர்களுக்கு அன்பும், வாழ்த்துக்களும்.. அது எனக்கு முன்னாடியே தெரியும்.. தம்பி 26 ல (2026) தான் போட்டியிடுவார்.. பாராளுமன்றம் வந்து ஒரு மாநில கட்சி தொடங்கும் போது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது சரியா இருக்காது. அதற்கு சான்று அண்ணன் கமல், தினகரன் போன்றவர்கள் எல்லாம். அது இருக்க முடியாது.

ஒரு மாநில கட்சி, மாநிலத்தின் நலன், மாநில பிரச்சனை, அதை முன்வைத்து தொடங்கும் போது அங்கிருக்கின்ற தேர்தலை தான் முதன்மையாக கவனம் செய்ய வேண்டும்.. அதனால் தான் 26 இல் தான் வருவார்.. ஒரு ஆண்டு.. ஒன்றரை ஆண்டுகள் களப்பணிக்கு எடுத்துக் கொள்கிறார். நாங்கள் எல்லாம் 5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டோம். முன் தயாரிப்பு இருந்தது.. கட்டமைப்பது..

புதிதாக வர்றவங்கள நம்ம நோக்கம் என்ன, அரசியல், என்ன எந்த மாதிரியான அரசியலை முன்வைத்து நகர வேண்டும்.. அதெல்லாம் பயிற்சி கொடுத்து.. தயார் பண்ணி கொண்டு போக காலம் எடுக்கும். அப்போ அதற்கு முன் தயாரிப்புக்கு ஒரு ஆண்டு, ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்குறாரு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்.. முன்னாடியே எனக்குதெரிஞ்சது தான்.. சரிதான் என்றார்.