தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தெலுங்கில் குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். குஷி படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குஷி படத்தின் சூட்டிங் சமயத்தின் போது நடிகை சமந்தாவை விஜய் தேவரகொண்டா அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.

அவர் இதனை ஒரு தொகுப்பாக எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சமந்தா மற்றும் விஜய் தேவர கொண்டாவின் நட்பை அழகாக காண்பிப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் குஷி திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)