பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி செட்டி, ப்ரியாமணி, சரத்குமார் மற்றும் அரவிந்த்சாமி போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பல கொலைகளை செய்த முக்கிய குற்றவாளியான அரவிந்த் சாமியை காவல் நிலையத்தில் உள்ள சிலர் கொல்ல முயற்சி செய்கிறார்கள்.

அந்த சமயத்தில் அரவிந்த்சாமியை பெங்களூர் நீதிமன்றத்தில் பத்திரமாக ஒப்படைக்கும் பொறுப்பை கான்ஸ்டபிள் ஆக இருக்கும் நாக சைதன்யா ஏற்கிறார். நாக சைதன்யா பெங்களூரு நீதிமன்றத்தில் அரவிந்த் சாமியை ஒப்படைக்க செல்லும்போது கீர்த்தி செட்டியும் அவருடன் வந்துவிடுகிறார். அவர்கள் காவல்துறையினரின் தாக்குதலில் இருந்து பத்திரமாக தப்பித்து பெங்களூர் நீதிமன்றத்தில் அரவிந்த் சாமியை ஒப்படைத்தார்களா என்பது தான் படத்தின் கதை.

இதில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியின் நடிப்பு ரசிகர்களின் கைதட்டல்களை பெறுகிறது. 90’ஸ் காலகட்டத்தில் நடந்தது போன்று கஸ்டடி திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.‌ கஸ்டடி படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கதையில் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக விறுவிறுப்பு இல்லை. கதையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை ரசிகர்கள் ஈசியாக கணிக்கும் படி தான் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் மாநாடு படத்தை பார்த்து விட்டு சென்ற ரசிகர்களுக்கு கஸ்டடி படம் சற்று ஏமாற்றமாக தான் இருந்திருக்கும்.