மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக பிரித்திவிராஜ் இருக்கிறார். நடிகர் பிரித்திவிராஜ் தமிழில் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் உட்பட 5 தயாரிப்பாளர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பெற்ற கருப்பு பணத்தை மலையாள திரை உலகில் புழக்கத்தில் விட்டுள்ளனர் என்றும், அவர்கள் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ளனர் என்று ஒரு youtube சேனல் தகவல் வெளியிட்டுள்ளது.

அதோடு இந்த முறை கேட்டில் சிக்கிய நடிகர் பிரித்திவிராஜ் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதாகவும் அந்த youtube சேனல் கூறி இருக்கிறது. இது மலையாளத் திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பொதுவாக நான் இது போன்ற விஷயங்களை கண்டு கொள்வதில்லை. ஆனால் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. நான் எந்த அபராதமும் செலுத்தவில்லை. மேலும் என்னை பற்றி இப்படி தவறான செய்திகளை பரப்பியதற்காக சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.