வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு  பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதற்கு முன்னாள் மாணவர் சங்கத்தினர் முன்னிலை வகிக்க,  ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு 8 கண்காணிப்பு கேமராக்கள், 150 நாற்காலிகள் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் வெளியூர், வெளிநாடுகளில் சென்று அதிகாரியாக பணியாற்றி வந்தவர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.