பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான நவல் கிஷோர் பாண்டே என்ற முதியவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு முதியவர் கீழே விழுந்ததால் அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையில் கைமூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு பணியில் இருந்த 2 பெண் காவலர்கள் கோபமடைந்தனர். இதையடுத்து அந்த பெண் காவலர்கள் தாங்கள் வைத்திருந்த லத்தியால் முதியவர் நவல் கிஷோரை சரமாரியாக நடுரோட்டில் வைத்து அடித்துள்ளனர். இதன் காரணமாக முதியவருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் துடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது. இ

ந்த வீடியோவை பார்த்த சமூகஆர்வலர்கள் முதியவரை தாக்கிய அந்த பெண் காவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த பெண் காவலர்கள் இருவரையும் 3 மாதங்களுக்கு பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது..