பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால் அவருக்கு எதிராக புகார் அளிக்க இந்த க்யூஆர் கோடு வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இம்முறையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வாகனம் பற்றிய விபரங்களும் பயணிகளுக்கு கொடுக்கப்படும். ஆட்டோக்களில் இந்த புது சாப்ட்வேர் கொள்கைகளை நடைமுறைப்படுத்த பெங்களூர் போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோ ரிக் ஷா யூனியன்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கியூஆர் கோடு முறை வசதியானது மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் ஏற்கனவே  நடைமுறையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.