திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு திருப்பதியில் அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் மூலமாக செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கும் அறைகளும் விடுதிகளும் உள்ளன.

30 வருடங்களாக மலிவு விலையில் ரூம்களை வாடகைக்கு கொடுத்து வந்த தேவஸ்தானம் அதனை தற்போது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 750 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 2200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.