திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய கணினி படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 28 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இது போன்ற திட்டங்களில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

இதனையடுத்து நல்ல பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு ரூ.12 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.

இதற்கு தகுதி பெற்றவர்கள் இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், எண்.305, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ வருகிற 9-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0421 2971149 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.