உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் சென்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு என நட்சத்திரங்கள் பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள்.  பெரும் எதிர்பார்ப்புகளிடையே ரிலீசான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்கள்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். அதில் கூறியுள்ளதாவது, வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்து இருக்கின்றார்கள். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.