தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக துடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஒரு சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா தற்போது மீண்டும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மம்முட்டிக்கு ஜோடியாக காதல் தீ கோர் என்ற திரைப்படத்திலும் ஹிந்தியில் ஸ்ரீ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஜோதிகா புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உண்மையில் இது ஜோதிகாவா இல்லை அவருடைய மகளா என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.