சூன் 25  கிரிகோரியன் ஆண்டின் 176 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 177 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1632 – எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார்.

1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.

1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1741 – ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார்.

1788 – வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.

1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர்.[1] ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.[2]

1900 – தாவோயிசத் துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் மொகாவோ கற்குகைகள் தொடர்பான அரிய கையெழுத்துப்படிகளைக் கண்டுபிடித்தார்.

1910 – ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறவேற்றியது.

1935 – சோவியத் ஒன்றியத்துக்கும் கொலம்பியாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.

1943 – பெரும் இன அழிப்பு: போலந்து, செஸ்டசோவா வதைமுகாமில் யூதர்கள் நாட்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.

1950 – வட கொரியாவின் தென் கொரியா மீதான படையெடுப்பை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.

1960 – பனிப்போர்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர்களாகப் பணியாற்றிய குறியாக்கவியலாளர்கள் இருவர் மெக்சிக்கோவிற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்றனர்.

1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.

1975 – போர்த்துகல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.

1981 – மைக்ரோசாப்ட் வாசிங்டனில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1983 – இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

1991 – குரோவாசியாவும் சுலோவீனியாவும் யுகோசுலாவியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தன.

1996 – சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.

1997 – ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.

1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.

2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

2017 – ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1852 – அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1926)

1896 – சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம், இலங்கை அரசியல்வாதி

1900 – மவுண்ட்பேட்டன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 44வது தலைமை ஆளுநர் (இ. 1979)

1900 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய-சோவியத் வானியலாளர் (இ. 1969)

1903 – ஜார்ஜ் ஆர்வெல், பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1950)

1908 – சுசேதா கிருபளானி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் (இ. 1974)

1919 – மு. கார்த்திகேசன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, ஆசிரியர் (இ. 1977)

1925 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக் கலைஞர்

1931 – வி. பி. சிங், இந்தியாவின் 7வது பிரதமர் (இ. 2008)

1933 – அ. மாற்கு, ஈழத்து ஓவியர் (இ. 2000)

1935 – ஆர். சிவலிங்கம், இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளர்

1959 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியலாளர் (இ. 1996)

1961 – ரிக்கி கேர்வைஸ், ஆங்கிலேய நடிகர், இயக்குநர்

1962 – நடராஜா ரவிராஜ், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 2006)

1972 – சைஃப் அல்-இசுலாம் கதாஃபி, லிபிய அரசியல்வாதி

1975 – விளாடிமிர் கிராம்னிக், உருசிய சதுரங்க வீரர்

1978 – அப்தப் சிவதசனி, இந்தியத் திரைப்பட நடிகர்

1981 – பூஜா, தென்னிந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள்

1671 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தானிய மதகுரு, வானியலாளர் (பி. 1598)

1772 – முத்து வடுகநாதர், சிவகங்கை பாளைய மன்னர்

1894 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரான்சின் 5வது அரசுத்தலைவர் (பி. 1837)

1960 – வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (பி. 1893)

1965 – பெர்ட்டில் இலிண்ட்பிளாடு, சுவீடிய வானியலாளர் (பி. 1895)

1984 – மிஷேல் ஃபூக்கோ, பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1926)

2007 – ஜீவா, இந்திய திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1963)

2007 – சுஜாதா கிருஷ்ணன், மலேசியத் திரைப்பட நடிகை (பி. 1979)

2009 – மைக்கல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1958)

2010 – ஜெ. சுத்தானந்தன், கல்வியாளர், சமூக சேவகர் (பி. 1944)

இன்றைய தின சிறப்பு நாள்

மர நாள் (பிலிப்பீன்சு)

விடுதலை நாள் (மொசாம்பிக், போர்த்துகலிடம் இருந்து 1975)

ஆசிரியர் நாள் (குவாத்தமாலா)

உலக தோல் நிறமி இழத்தல் நாள்