ஒரு சிம்பன்சி பெண் சுற்றுலா பயணியை முத்தமிட்டு அவருடன் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. வண்ணமயமான பேன்ட் அணிந்திருக்கும் ஒரு குறும்புக்கார சிம்பன்ஸி, பெண் சுற்றுலாப் பயணியுடன் விளையாடுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பெண்ணும் சிம்பன்சியும் ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்திருக்கிறார்கள்.

இதையடுத்து தன் குறும்புக்கார குணத்தை காட்டும் விதமாக அது அந்த பெண்ணுடன் பல போஸ்களில் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றது. அதன்பின் சிம்பன்சி அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுக்கிறது. இறுதியாக சிம்பன்சி அப்பெண்ணின் தோளில் ஏறி கேமராவுக்கு போஸ் கொடுக்கிறது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/ChUPYJVpC0C/?utm_source=ig_web_copy_link