மே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.

1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.

1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார்.

1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.

1912 – பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1921 – உருமேனியாவில் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1927 – பாரிசில் இருந்து நியூ யார்க் வரை வானூர்தியில் முதல்தடவையாக இடைத்தங்கல் எதுவுமின்றி பறந்து சாதனை படைக்க முயன்ற பிரான்சியப் போர் வீரர்கள் சார்லசு நுங்கெசர், பிரான்சுவா கோலி ஆகியோர் இடையில் காணாமல் போயினர்.

1933 – மகாத்மா காந்தி தலித் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை இங்கிலாந்தின் நோட்டிங்காம், டார்பி நகரங்கள் மீது குண்டுகளை வீசியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசின் வானூர்தி தாங்கிக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் லெக்சிங்டன் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து பவளக் கடல் சமர் முடிவுக்கு வந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு மூன்று இலங்கையர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் எட்டு பேருக்கு 3-7 ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் மேற்குப் பகுதிப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.

1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

1946 – எசுத்தோனிய பள்ளி மாணவிகள் இருவர் தாலின் நகரில் அமைக்கப்பட்டிருந்த சோவியத் நினைவகத்தைத் தகர்த்தனர்.

1963 – கத்தோலிக்க அரசுத்தலைவர் நியோ டின் தியெம் கீழிருந்த தென் வியட்நாம் படையினர் வெசாக் நாளில் பௌத்தக் கொடி ஏற்றுவதற்கிருந்த தடையை மீறிய பௌத்தர்கள் மீது சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

1978 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், பீட்டர் எபெலர் இருவரும் முதற்தடவையாக ஆக்சிசன் ஊக்கி எதுவும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் மனிதர் எனற சாதனையை ஏற்படுத்தினர்.

1980 – பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1984 – டெனிசு லோர்ட்டி என்ற இராணுவ வீரர் கியூபெக் சட்டமன்றத்தினுள் புகுந்து சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர்.

1987 – வட அயர்லாந்து, லோகல் என்ற இடத்தில் எட்டு ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1997 – சீனாவில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1998 – இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முசுலிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.

2017 – தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1521 – பீட்டர் கனிசியு, டச்சு-சுவிட்சர்லாந்து மதகுரு, புனிதர் (இ. 1597)

1737 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய அரசியல்வாதி, வரலாற்றாளர் (இ. 1794)

1786 – ஜான் வியான்னி, பிரான்சியப் புனிதர் (இ. 1859)

1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய சுவிட்சர்லாந்து தொழிலதிபர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1910)

1884 – ஹாரி எஸ். ட்ரூமன், ஐக்கிய அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (இ. 1972)

1894 – பெஞ்சமின் கிரகாம், பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணர் (இ. 1976)

1895 – புல்டன் சீன், அமெரிக்கப் பேராயர் (இ. 1979)

1899 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரியப் பொருளியலாளர் (இ. 1992)

1916 – சின்மயானந்தா, இந்திய சமயத் தலைவர் (இ. 1993)

1924 – சு. வித்தியானந்தன், இலங்கைக் கல்விமான், தமிழறிஞர் (இ. 1989)

1925 – கு. சி. அமுர், இந்திய எழுத்தாளர், விமர்சகர்

1929 – கிரிஜா தேவி, இந்தியப் பாடகி (இ. 2017)

1926 – டேவிட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய சூழலியலாளர்

1938 – ஜாவிட் புர்க்கி, இந்தியப்-பாக்கித்தானியத் துடுப்பாளர்

1953 – ரெமோ பெர்னாண்டஸ், போர்த்துகீச-இந்தியப் பாடகர்

1953 – தேவி செட்டி, இந்திய இதய அறுவை சிகிச்சையாளர், தொழிலதிபர்

1954 – குவாம் ஆந்தனி அப்பையா, கானா-ஆங்கிலேய மெய்யியலாளர்

1993 – பாட் கம்மின்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்

685 – இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 635)

1794 – அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (பி. 1743)

1821 – காலின் மெக்கன்சி, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவன இராணுவ அதிகாரி, கீழ்த்திசை ஆய்வாளர் (பி. 1754)

1891 – எலனா பிளவாத்ஸ்கி, பிரம்மஞான சபையைத் தோற்றுவித்த உருசிய-ஆங்கிலேயர் (பி. 1831)

1936 – ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர் (பி. 1880)

1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்

1967 – கூடூரு வெங்கடாசலம், இந்திய ஆர்வலர், வேளாண்மை அறிவியலாளர் (பி. 1909)

1972 – பாண்டுரங்க வாமன் காணே, இந்தியவியலாளர், சமக்கிருத அறிஞர் (பி. 1880)

1972 – தாமோதரம் சஞ்சீவய்யா, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி, முதலமைச்சர் (பி. 1921)

1987 – வி. பி. சிந்தன், தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1918)

1988 – ராபர்ட் ஏ. ஐன்லைன், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1907)

1993 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (பி. 1918)

2005 – வலம்புரி ஜான், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி (பி. 1946)

2008 – சி. நாகராஜா, இலங்கை வழக்கறிஞர், யாழ்ப்பாண மாநகர முதல்வர் (பி. 1931)

இன்றைய தின சிறப்பு நாள்

இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாள் (ஐரோப்பா)

வெண்தாமரை நாள் (பிரம்மஞானம்)

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்

பெற்றோர் நாள் (தென் கொரியா)

விடுதலை நாள் (செக் குடியரசு)