தற்போது ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் ஸ்மார்ட் போன்கள் வெடிக்கும் சம்பவங்களானது அதிகரிக்கிறது. நேரடி சூரிய ஒளியில் உங்களது ஸ்மார்ட் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோடை நாட்களில் ஸ்மார்ட் போனை உங்களது காரில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்களது போன் சார்ஜ் ஆகும்போது அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது எப்போதும் நல்லது. மேலும் எப்போதும் உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். உங்களது மொபைலை நீண்டநேரம் சார்ஜ் போடக்கூடாது. இரவு முழுவதும் போனை சார்ஜ் போடக்கூடாது. உங்களது போன் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதும் சார்ஜரை அகற்ற வேண்டும். உங்கள் ஸ்மார்ட் போன் மிகவும் சூடாக இருப்பின் அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உங்களது ஸ்மார்ட் போனை அணைத்து சில நிமிடங்களுக்கு குளிர்ச்சியடைய வைப்பது நல்லது.