மே 5  கிரிகோரியன் ஆண்டின் 125 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 126 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.

1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார்.

1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார்.

1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.

1762 – கண்டி மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஜோன் பைபசு என்பவரை இலங்கைக்கு அனுப்பியது.[1][2]

1809 – சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை வழங்கியது.

1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் நாடு கடத்தப்பட்ட நிலையில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் செயிண்ட் எலனா தீவில் இறந்தார்.

1838 – இந்தியாவில் இருந்து முதல் தொகுதி தொழிலாளர்கள் கயானா வந்தடைந்தனர்.

1860 – கரிபால்டி ஆயிரக்கணக்கானோருடன் செனோவாவில் இருந்து சிசிலியைக் கைப்பற்றப் புறப்பட்டார். இத்தாலி இராச்சியம் உருவானது.

1862 – சிங்க்கோ டே மாயோ: புவெப்லா சண்டை: மெக்சிக்கோவில் இக்னேசியோ சரகோசா தலைமையிலான படைகள் பிரெஞ்சு முற்றுகையை முறியடித்தன.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பு அரசு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1866 – நினைவு நாள் முதல் தடவையாக அமெரிக்காவின் வாட்டர்லூ நகரில் கொண்டாடப்பட்டது.

1912 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்க் இல் இருந்து முதன் முதலாக வெளியிடப்பட்டது.

1925 – தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்கான மொழி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.

1936 – எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றின.

1940 – இரண்டாம் உலகப் போர்: நாடு கடந்த நிலையில் நோர்வேயின் அரசு லண்டனில் அமைக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: நார்வே போர்த்தொடர்: நார்வே படைக்ள் எக்ரா, வின்யசுவிங்கன் சண்டைகளில் செருமனியப் படைகளிடம் சரணடைந்தன.

1941 – எதியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தின் கிளெய்சோரா கிராமத்தில் 216 பொதுமக்களைப் படுகொலை செய்தன.

1944 – மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் செருமனியின் பிடியில் இருந்து பிரித்தானியப் படைகளால் விடுவிக்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பை எதிர்த்து பிராகா நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.

1946 – போர் குற்றம், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 28 சப்பானிய இராணுவ, அரச அதிகாரிகள் மீது பன்னாட்டு விசாரணை டோக்கியோவில் ஆரம்பமானது.

1950 – தாய்லாந்தின் மன்னராக பூமிபால் அதுல்யாதெச் ஒன்பதாவது ராமா என்ற பெயரில் முடி சூடினார்.

1955 – மேற்கு செருமனி முழுமையான விடுதலை அடைந்தது.

1961 – மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பர்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.

1972 – இத்தாலிய வானூர்தி சிசிலியில் லோங்கா மலையில் மோதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 115 பேரும் உயிரிழந்தனர்.

1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

1980 – ஆறு நாட்களாக தீவிரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவை தாக்குதலை ஆரம்பித்தது.

1981 – அயர்லாந்து புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் 66 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் இருந்து தனது 27வது அகவையில் காலமானார்.

1992 – கோர்சிகாவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.

1994 – நகோர்னோ கரபாக் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்த ஆர்மீனியா, அசர்பைஜான் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

2006 – சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

2007 – கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் உயிரிழந்தனர்.

2014 – ஏஜியன் கடலில் கிரேக்கக் கரையோரப் பகுதியில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரன்டு படகுகள் மோதிக் கொண்டதில் 22 பேர் உயிரிழந்தனர்.

2018 – வடகொரியாவின் நேரம் 30 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டு, தென் கொரியா மற்றும் சப்பான் நேரங்களுடன் சமப்படுத்தப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1479 – குரு அமர் தாஸ், 3வது சீக்கிய குரு (இ. 1574)

1752 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1830)

1813 – சோரன் கீர்க்கே கார்ட், டென்மார்க் மெய்யியலாளர் (இ. 1855)

1818 – கார்ல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர், சமூகவியலாளர் (இ. 1883)

1833 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானிய புவியியலாளர், கல்வியாளர் (இ. 1905)

1862 – நிக்கோ பிரொசுமானி, சியோர்சிய ஓவியர் (இ. 1818)

1864 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1922)

1883 – ஆர்ச்சிபால்ட் வேவல், ஆங்கிலேய தளபதி, பிரித்தானிய இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (இ. 1950)

1903 – தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி. (இ. 1991)

1911 – பிரிட்டிலடா வதேதர், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1932)

1916 – ஜெயில் சிங், இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1987)

1916 – பி. யு. சின்னப்பா, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர் (இ. 1951)

1922 – டி. ஆர். ராஜகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999)

1933 – இரத்னசிறி விக்கிரமநாயக்கா, இலங்கையின் 11வது பிரதமர் (இ. 2016)

1943 – மைக்கேல் பாலின், ஆங்கிலேய நடிகர்

1951 – குல்சன் குமார், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் (இ. 1997)

1964 – ஆறுமுகம் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2020)

இன்றைய தின இறப்புகள்

1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் (பி. 1769)

1859 – டிரிஃக்லெ, செருமானியக் கணிதவியலாளர் (பி. 1805)

1953 – ஆர். கே. சண்முகம், இந்தியப் பொருளாதார நிபுணர் (பி. 1892)

1957 – தேவன், தமிழக நகைச்சுவை எழுத்தாளர் (பி. 1913)

1981 – பொபி சான்ட்ஸ், ஐரியப் புரட்சியாளர் (பி. 1954)

1995 – லடிஸ் வீரமணி, இலங்கை மேடை நாடக நடிகர், நாடகாசிரியர், நாடக இயக்குநர்

2007 – தியோடோர் மைமான், சீரொளியைக் கண்டுபிடித்த அமெரிக்க-கனடிய இயற்பியலாளர் (பி. 1927)

2010 – உமரு யராதுவா, நைஜீரியாவின் 12வது அரசுத்தலைவர் (பி. 1951)

2012 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1950)

2021 – டி. கே. எஸ். நடராஜன், தமிழகத் திரைப்பட நடிகர், நாட்டுப்புறப் பாடகர் (பி. 1933)

இன்றைய தின சிறப்பு நாள்

பன்னாட்டு மருத்துவச்சிகள் நாள்

குழந்தைகள் நாள் (யப்பான், தென் கொரியா)

இந்தியர்கள் குடியேற்ற நாள் (கயானா)

விடுதலை நாள் (டென்மார்க், நெதர்லாந்து)