ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரன் ரூ.46,000-ஐ தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000க்கும், கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒருகிராம் வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து ரூ.82.80க்கும், கிலோ வெள்ளி ரூ. 82,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.