தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது தொடர்பான விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா டுவிட் செய்துள்ளார். அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக சீமான் உட்பட பலர் வெறுப்பு பிரச்சாரம் செய்தபோது தமிழக அரசும், காவல்துறையும் மௌனமாக இருந்ததே இன்றைய சூழ்நிலைக்கு காரணம். ஆகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளார்.