கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்களை உடனே அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டுவிட் செய்துள்ளார். அதில், நாகூர் பகுதியில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கடலை நாசப்படுத்திய மத்திய, மாநில அரசை நான் கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே விளை நிலங்களின் வழியே எண்ணெய் குழாய்களை புதைத்து நிலத்தை நாசமாக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுத்த நிலையில், இப்போது கடலுக்கடியில் புதைத்து சுற்றுச்சூழலையும், மீனவ மக்களின் நலவாழ்வையும் நாசப்படுத்த முனைந்துள்ளது பெருங்கொடுமையாகும். அதோடு கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் நாகூர் மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதுடன், கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழக்கும் பேராபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.