தமிழகத்தில் கடந்த வருடம் முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மருத்துவம், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவத்துறையில் இயக்குனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கிறது. தற்போது காலியாக உள்ள 4 மருத்துவ இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது. மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் இருப்பதால் ஒருவர் பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர்களின் வேலை சுமையும் பொறுப்பும் அதிகரித்துள்ளது. எனவே மருத்துவத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.