ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளது. அதில், 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த ஜனவரி 31ஆம் தேதிக்கு முன்பு அதற்கான 12D படிவம் வழங்கப்படும். பூர்த்தி செய்த படிவத்தை பிப்ரவரி 4ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீட்டுக்கே வந்து பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.