டைரக்டர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடித்திருந்த போதும் அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் குஷ்பூ காட்சிகள் நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இது தொடர்பாக படத்தின் எடிட்டர் கே.எல்.பிரவீன் கூறியதாவது “நடித்தும் படத்தில் இல்லாதவர்கள் என்னை பார்த்தால் கொன்றுவிடுவார்கள்.

அந்த அளவுக்கு என் மீது கோபத்தில் இருப்பார்கள் என்பது தெரியும். அவர்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராத வகையில் அந்த காட்சிகள் நீக்கவேண்டியதாயிற்று. மீண்டுமாக தியேட்டரில் அந்த காட்சிகளை சேர்த்து விடலாம் என நம்பிக்கையில் உள்ளோம். இது பற்றி இயக்குனர் வம்சி குஷ்பூவிடம் பேசி விட்டார். குஷ்பூவும் எனக்கு வருத்தம் எதுவுமில்லை என கூறி விட்டார். படத்தின் நீளம் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டது” என அவர் கூறினார்.