ஜோக்கர், ஆண்தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், இப்போது இடும்பன்காரி எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி அப்புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சோசியல் மீடியாவை கலக்கி வருகிறார் ரம்யா பாண்டியன்.

இப்போது ரம்யா பாண்டியன், தேன் என்ற திரைப்படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கும் புது படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் உதயநிதி நடித்த கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி 9ம் தேதி துவங்க இருக்கிறது. கடந்த 1996-ல் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகிறது.