இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும் எளிதாகி விட்டது. UPI என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. UPI வந்த பிறகு பணத்தை கையில் எடுத்து செல்வது குறைந்துவிட்டது. ஏனென்றால் பெரும்பாலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக செய்யப்படுகின்றன. இப்படியான நிலையில் டிஜிட்டல் கட்டண வசதியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது திரும்ப பெறுதல் கோரிக்கைகளை ஏற்கும் அல்லது நிராகரிக்க கூடிய செயல்முறையை தானாகவே நடக்க ஏற்பாடு செய்துள்ளது.

ஒரு நபரின் யூ பி ஐ பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் பணத்தை திரும்ப பெறுவது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால் அவர் தன்னுடைய வங்கியில் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும். முன்னதாக இந்த கோரிக்கை கைமுறையாக சரிபார்க்கப்பட்ட நிலையில் தாமதம் ஏற்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகளின்படி பரிவர்த்தனை கடன் உறுதிப்படுத்துதல் அல்லது திரும்பப் பெறும் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் திரும்பப்பெறும் கோரிக்கை தானாகவே ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும். இது பரிவர்த்தனைகள் தொடர்பான சர்ச்சைகளை விரைவில் தீர்க்க வழிவகுக்கும். அது மட்டுமல்லாமல் இது தானாகவே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.