உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்லா பார்சி கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் மற்றும் அவரது மனைவி ஷிவானி (20) 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.
திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில், சில மாதங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக, பிரமோத் தனது மாமியாரான ஷிவானியின் தாயாருடன் நெருங்கிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதோடு, தகாத உறவில் ஈடுபட்டதாக கிராமத்தில் பேசப்பட்டு வந்தது.
இதை அறிந்த ஷிவானி மனஅழுத்தத்துக்குள்ளாகி, கணவருடன் பலமுறை இதைப் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரமோத் தனது மனைவியின் எதிர்ப்பை புறக்கணித்து மாமியாருடன் உறவைத் தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையில், சில நாட்களுக்கு முன் ஷிவானி வீட்டின் வராண்டாவில் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
ஆரம்ப விசாரணையில் இது தற்கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அதற்கு பின்னணி காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பிரமோத் மற்றும் ஷிவானியின் தாயாரின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
இந்த புகைப்படங்கள் வெளிவந்ததையடுத்து, ஷிவானியின் மாமா போலீசில் முறையிட்டுள்ளார். இதன் பேரில் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். ஒரு பெண்ணின் மரணம் பின்னணியில் இப்படியான தகாத உறவு வெளிவந்திருப்பது, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
