சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக சார்பாக
பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் 2024 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வந்தால் அன்றைக்கு தான் உண்மையான பொங்கலாக இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என கூறி தான் போகி கொண்டாடுகிறோம்.

அதுபோலத்தான் வர இருக்கும் தேர்தலில் திமுக அரசு கழிந்து மீண்டுமாக அதிமுக ஆட்சி மலரும். அதற்காகத் தான் அதிமுக காத்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.