2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

அந்த வகையில் மாசு ஏற்படுத்திய மத்திய மாநில அரசுகளின் வாகனங்களை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேபோல் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் நிதி ஒதுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் 2070 ஆம் ஆண்டுக்குள் 0 கார்பன் வெளியேற்றம் என்ற  இலக்கு எட்டப்படும் எனக் கூறியுள்ளார்.