ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2&ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள். இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதன் பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதைப் போன்ற அமுமுக, திமுக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அந்த வகையில் அதிமுக கட்சியில் இபிஎஸ் அணியில் இருந்து கே.எஸ். தென்னரசு வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் அணி சார்பில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவரின் பெயரும் இடம் பெறவில்லை. மேலும் கூட்டணியின் பெயரும் தேசிய முற்போக்கு ஜனநாயக கூட்டணி என மாற்றப்பட்டுள்ளது. இது பாஜக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.