இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பாஜக கட்சியின் எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மந்திரி ஸ்மிருதி இராணி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அவரை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் அவரை காணவில்லை என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.