ஸ்மார்ட் டிவி பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக அல்ட்ரா எச்டி TV-யை வாங்குவது சில சமயங்களில் பலரின் பட்ஜெட்டில் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். அல்ட்ரா எச்டி டிவிகள் சாதாரண ஸ்மார்ட் டிவியில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும். இதனிடையே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவியை வாங்கினால், இதற்கு நீங்கள் ரூ.7000 என்ற துவக்க தொகையை செலுத்தினால் போதும்.

இது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. எனவே இறக்குமதி வரி போன்றவற்றை இவற்றுக்கு செலுத்தவேண்டிய அவசியமில்லை. அதோடு அவை மிகவும் கம்மியான விலையில் விற்கப்படுவதற்கு இதுவே காரணம் ஆகும். அல்ட்ரா எச்டி tvகள் உங்களுக்கு அடுத்த நிலை காட்சி அனுபவத்தினை அளிக்கிறது. சிறப்பம்சம் என்னவெனில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்ட்ரா எச்டி டிவிகளில் பல அம்சங்களை காணலாம். இதில் முன்னதாக நிறுவப்பட்ட சமூகஊடக பயன்பாடுகள், டால்பி சவுண்ட் மற்றும் டால்பி விஷன் ஆகிய அம்சங்கள் அடங்கும். உங்களது அனுபவத்தினை இன்னும் மேம்படுத்தக்கூடிய அம்சங்களை இந்த டிவியில் பெறுவீர்கள்.