உக்கரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும் படி இந்தியாவை உக்கரைன் வலியுறுத்தியுள்ளது. உக்கரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைபிடித்து வருகிறது. அதன் காரணமாக ஐநாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் இந்தியா பெரும்பாலும் புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் உக்கரைனின் போர் ஓராண்டை நிறைவு செய்வதை ஒட்டி உக்கரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தின் மீது இன்னும் சில நாட்களில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் படி உக்கரைன் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உக்கரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தாங்கள் ரஷ்யாவின் ஒரு சென்டிமீட்டர் நிலத்தை கூட உரிமை கூறவில்லை என்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தங்களது பகுதிகளை திரும்ப பெற விரும்புவதாகவும் கூறினார்.