குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக புதுமண தம்பதிக்கும் சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என சீன அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்து வருகின்றது. சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக சில சர்வதேச அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்து வருகின்றது.

அதன்படி தற்போது அசத்தலான அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது. குழந்தை பிறக்கும் விதத்தை உயர்த்துவதற்காக புதுமண தம்பதிக்கும் சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் முன்னதாக மூன்று நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.