காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கால நிலை மாற்றத்தால் வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது எனவும் மழையின்மை, வறண்ட குளிர்கால காலநிலை ஆகியவற்றில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காலநிலை சில நாட்களாக மோசம் அடைந்து வருகின்றது எனவும் சாதாரண நிலையை மீட்டெடுக்க குறைந்தது ஐம்பது நாட்கள் மழை தேவை என்றும் இத்தாலிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.