சீனாவில் 2400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்ஷி  மாகாணத்தில் உள்ள லியாங் தொல்பொருள் தளத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் சீனாவில் 2400 ஆண்டு பழமையான கழிப்பறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே ப்ளக்ஸ் கழிவறை இதுதான் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கழிப்பறையில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பழங்கால மக்களின் உணவு முறைகள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.