செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு முதலமைச்சர் ஆகிய, ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் தான் அமையும். அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்.

பழனிச்சாமிக்கு இங்கே வேலையே கிடையாது. பாருங்க என்ன நடக்கப்போகிறது என்று ?  கூட்டணியில் பல கட்சிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அண்ணனோடு.. கூட்டணியை கூட அவர் அன்றைய தினம் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அடுத்து  என்ன பண்ணப் போகிறோம் ? எங்கு அறிவிக்க போகிறோம் ? என்ன நடக்கப் போகிறது என்பதை சொல்லப் போகிறார்.

நாங்கள் எந்த முடிவை எடுக்கப் போகிறோம் ? எந்த முடிவை எட்ட  போகிறோம் என்பதை எல்லாம் அண்ணன் ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பார்கள். போதாத நேரம் பாரத பிரதமரோடு நட்புறவோடு இருந்தார் அண்ணன். நல்லெண்ண அடிப்படையில் இருந்தார்கள். அவர் கூப்பிட்டு,   கொலை – கொள்ளையில் சந்தேகப்படுகின்ற…  ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்ற  ஒருவரை அழைத்து,  பக்கத்திலேயே அமர வைத்து…  அவரோடு பேசிக் கொண்டு இருந்து விட்டார்.

ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் முடிவு பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆகவே எங்களுடைய எண்ணங்கள் எல்லாம்… ஒரு கூட்டணி அமையும் ஆனால் ?  அது வெற்றி கூட்டணியாக…  ஓபிஎஸ் அண்ணன் தலைமையில் தான் அமையும். அதுதான் பண்ருட்டியார் அவர்களும் –  பல கருத்துக்களை,  ஆலோசனைகளை அன்றைய தினம் வழங்க இருக்கின்றர்க, சொல்ல இருக்கிறார்கள். அது அத்தனையும் நீங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரி  20ஆம் தேதி மாலை நிச்சயமாக அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.