நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து இருக்காங்க. ஊடகம் பத்திரிகை நம்ம தான் சொல்ல வேண்டும். போட்டு காட்டுங்க….

2021 சட்டமன்ற தேர்தலில் என்ன சொன்னாங்க ? 2021 சட்டமன்ற பொது தேர்தலில் என்ன சொன்னாங்க ? இன்றைய முதலமைச்சர்…  அன்னைக்கு எதிர்க்கட்சித் தலைவரா இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

எங்க ரத்து செஞ்சாங்க ? சட்டத்தை பத்தி மக்களுக்கு தெரியாது என்றுதானே மக்களை ஏமாத்தினாங்க. உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துட்டு,  இந்தியாவில் இருக்கிற அனைத்து மாநிலமும் நீட் தேர்வை அமல்படுத்திட்டாங்க. இந்த தமிழ்நாட்டில் மட்டும் நீட்டை எப்படி ரத்து பண்ண முடியும். ஆக வேண்டும் என்றே மக்களை ஏமாற்றி…  கவர்ச்சிகரமாக பேசி…  ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறாங்க.

நாங்க ரெடியா தான் இருக்கிறோம். கவர்னர் ஒத்துக்க மாட்டேங்குறாங்க.  எப்படி ? உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு எப்படி பண்ணுவீங்க? உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரா நீங்க செயல்பட முடியுமா ? நான் செயல்பட முடியுமா ? எல்லாருமே சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். எவ்வளவு உயர்ந்த பதவியாக இருந்தாலும்,  சட்டத்திற்கு உட்பட்டு தான் நடக்க முடியும்.

ஆனால் இவங்க சட்டத்தையும் மதிக்கிறது இல்ல, மக்களையும் மதிக்கிறது இல்ல. திட்டமிட்டு பொய் பேசி மக்களை ஏமாற்றி, இளைஞர்களை ஏமாற்றி, பெற்றோரை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றி..  வெற்றி பெற்ற பிறகு,  அந்தர் பல்டி அடிக்கிறாங்க. அவர் கொடுக்க மாட்டார், இவர் கொடுக்க மாட்டார் என்று… எப்படி கொடுக்க முடியும்? என தெரிவித்தார்.