திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினார். உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து, ‘பவர்புல்லாகச் செயல்படுகிறார், இறங்கி அடிக்கிறார்’ என்று அவர் பாராட்டினார்.
உதயநிதி ஸ்டாலின், கொள்கை ரீதியாக திமுகவை வலுப்படுத்தப் பாசறை கூட்டங்களை நடத்தியதாகவும், புதியப் பேச்சாளர்களை உருவாக்கி, அறிவுத்திருவிழாவை நடத்தியதாகவும் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், “கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு உதயநிதி ‘Most Dangerous’ ஆக இறங்கி அடிக்கிறார்” என்றும் அவர் கூறினார். திமுக-வுக்குத் தமிழ்நாட்டைக் காக்கும் கடமை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதையும் காக்க வேண்டிய கடமை இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
