விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கத்தில் கூலி வேலை பார்க்கும் தமிழ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் தமிழ் பாண்டியன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட்டு அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய இருவரும் தமிழ் பாண்டியனை வழிமறித்தனர்.

இதனையடுத்து அவர்கள் தமிழ் பாண்டியனிடம் இருந்து 1,500 ரூபாயை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் பாண்டியன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஸ்வநாதன் மற்றும் பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.