விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட ஆலபாக்கத்தில் நல்லதம்பி-மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1984-ஆம் ஆண்டு மாரியம்மாள் 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை சிங்காரம் என்பவரிடம் இருந்து வாங்கினார். கடந்த 2013-ஆம் ஆண்டு மாரியம்மாள் தனது மூத்த மகன் ரவிக்கு 1 ஏக்கர் நிலத்தையும், இளைய மகன் சரவணனுக்கு 70 சென்ட்  நிலத்தையும் தான சட்டில்மெண்ட் செய்து கொடுத்ததாக தெரிகிறது.

அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பவர் மாரியம்மாளின் இரண்டு மகன்களிடமும் முறையாக கிரையம் பெற்று அந்த நிலங்களை நல்லதம்பி நகர் என்ற பெயரில் வீட்டுமனைகளாக விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து மாரியம்மாள் வசம் இருந்த 60 சென்ட் நிலத்தையும் அபகரிக்க முடிவு செய்த முத்து போலியான ஆவணங்களை தயாரித்து 26 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தார். இதுகுறித்து மாரியம்மன் விழுப்புரம் மாவட்ட விழா அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.