வரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது, 1912ஆம் ஆண்டு பால்கன் போர்களின் (Balkan Wars) போது, புகழ்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் எம்.ஏ. அன்சாரி தலைமையிலான மருத்துவக் குழு துருக்கிய வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து, பல உயிர்களைக் காப்பாற்றியது.

இதைப் பாராட்டி துருக்கி, அவருக்கு “ஆர்டர் ஆஃப் ஆஸ்மானியா” (Order of Osmaniye) என்ற உயரிய விருதை வழங்கியது. மேலும், 1920-களில் துருக்கி சுதந்திரப் போர் மற்றும் குடியரசு உருவாக்கம் ஆகியவற்றிற்கு மகாத்மா காந்தி உட்பட இந்தியா ஆதரவு அளித்தது.

இவ்வளவு வரலாற்று உதவிகள் இருந்தபோதிலும், தற்போது துருக்கி பாகிஸ்தானை ஆதரிப்பது, காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்புவது, அபாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்குக் கொண்டு செல்ல அதன் வான்வழியில் தடை ஏற்படுத்தியது போன்ற இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

துருக்கி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பனிப்போர் காலகட்டத்திலேயே துருக்கி, அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து படிப்படியாகப் பாகிஸ்தானுக்கு நெருக்கமானது. அண்மையில், பாகிஸ்தானுடன் சேர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற ராணுவ நடவடிக்கைகளிலும் ஆதரவு அளித்தது.

இதன் ஒரு பகுதியாக, டெல்லி குண்டுவெடிப்புச் சதித்திட்டம் துருக்கியின் அங்காராவில் தீட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, 2016-17ல் துருக்கியில் நடந்த கிளர்ச்சிக்குக் காரணமான ‘ஃபதுல்லாஹ் குலென்’ (Fethullah Gulen) அமைப்பின் அலுவலகங்களை இந்தியாவில் மூட வேண்டும் என்று அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்தது. இந்தச் சம்பவமே துருக்கி இந்தியாவுக்கு எதிராகக் காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்பத் தூண்டியது என்றும் கூறப்படுகிறது.