செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் போக்கில் இருக்கின்றது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சனையை எடுத்துச் சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அண்ணா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது தான் இந்த அரசினுடைய வாடிக்கையாக  இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பதில் சொல்ல வேண்டும்.

திமுக அரசாங்கமே குளறுபடியாகத்தான் இருக்கின்றது. அதனால காவல்துறை குளறுபடியா இருக்கு. அரசாங்கம் நல்லா இருந்தா தானே காவல்துறை சரியான முறையில் செயல்படும்.  தலைமையே சரியில்லை. தலைமை சரியாக இருந்தால் தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் இடம் அளித்திருக்க மாட்டாங்க. நீங்க சொன்ன மாதிரி தினமும் கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை அன்றாடம் நடக்கின்றது. தொலைக்காட்சியிலும் இந்த செய்தி தான் அதிகமா இடம் பெறுகிறது.

இந்த அரசாங்கத்தினுடைய மெத்தன போக்கு. ஒரு நிர்வாக திறமைய அற்ற அரசாங்கம். பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். அப்படி ஆளுகின்ற அரசாங்கத்தில் இப்படிப்பட்ட நிலைமை தான் நிலவும்,  மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

டிடிவி தினகரன் கட்சியே கிடையாது. அவரை ஏன் பேசிக்கிட்டு இருக்கீங்க ? அவரை பொருட்படுத்துவதே கிடையாது. நாங்க எப்போதுமே அவருக்கு பதில் சொல்வதில்லை. அவரை ஒரு கட்சியா பார்ப்பதில்லை. இந்த தேர்தலோடு அவர் அட்ரஸ் காணாமல் போய்விடும். விலாசம் தெரியாத ஒரு கட்சியாக மாறிவிடும் என தெரிவித்தார்.