அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை (ஜூலை 4, 2026) கொண்டாடத் தயாராகி வரும் வேளையில், அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. “Freedom 250” என்ற பெயரில் ஓராண்டு காலம் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ராணுவ அணிவகுப்பு முதல் சிறப்பு நாணயங்கள் வரை அனைத்தும் தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாக அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கையெழுத்துடன் கூடிய ‘ஸ்பெஷல் எடிஷன்’ பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்தச் சிறப்பு பாஸ்போர்ட்டுகள் வாஷிங்டன் பாஸ்போர்ட் ஏஜென்சியில் மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, புதிய 100 டாலர் நோட்டுகளில் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளதும் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் எதிர்கால இலக்குகளை உலகிற்குப் பறைசாற்றுவதே இந்த விழாவின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த ‘பர்சனல் டச்’ கொண்ட மாற்றங்கள், அவரது ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், சர்வதேச அரங்கில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
