லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான Success Meet  சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில்   அமோகமாக நடைபெற்று வருகிறது.

  1. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து உலகளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
  2. திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் இன்றளவும் அதிகம் கவனம் ஈர்க்கும் படமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
  3. இந்நிலையில்  நவம்பர் 1 ஆம் தேதியான இன்று  சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் தயாரிப்பாளர்களால் ஒரு வெற்றி சந்திப்பு ஏற்பாடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அமோகமாக நடைபெற்று வருகிறது.
  4. வெற்றி சந்திப்பில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட “லியோ” படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
  5. விஜய்யின் ரசிகர்கள் இந்த சந்திப்பு விழாவில்  கூடி “லியோ” என்று உற்சாக கோஷமிட்டபடி, மிக உற்சாகமாக படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
  6. இதை தொடர்ந்து படம் குறித்து படத்தில் நடித்த அல்லது பணியாற்றிய நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் தங்களது கருத்துக்களை வெற்றி விழா மேடையில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,  படத்தில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா அவர்கள் பேசுகையில்,  கில்லி திரைப்படத்தில் விஜய் அவர்களுடன் நடித்த த்ரிஷா-வின்  தனலட்சுமி கதாபாத்திரம் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக வேலுவிடம் எனக்கு காரப்பூரி சாப்பிடணும் போல இருக்கு என கேட்பது போன்ற காட்சி அமைந்திருக்கும்.  அதை மேற்கோள் காட்டி,  இன்னும் விஜய் சார் எனக்கு காரா பூரி வாங்கி தரல,  எனவே அவருடன் இன்னொரு படம் பண்ணலாமா ? என கேள்வி எழுப்ப ரசிகர்கள் சில நிமிடங்கள் இடைவிடாது  கூச்சலிட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.