பல உயிரை தியாகம் செய்து இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தவர்கள் பலர். இந்தியாவில் சுமார் 200 ஆண்டுக்கு மேல் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் இருந்து வந்தது. பல தேச தலைவர்கள் தமது தாய் நாட்டிற்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை நடத்தி இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்து சென்றுள்ளார்கள். அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையிலேயே வருடாவருடம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகின்றது.
குடியரசு என்பதற்கு சரியான அர்த்தம் மக்களாட்சியாகும். மக்களாட்சி என்பது தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் முறைக்கு குடியாட்சி எனப்படுகின்றது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே காந்தியடிகள் இந்திய நாட்டின் குடியரசு நாளினை ஜனவரி 26 அன்று கொண்டாட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தார். இதனை கருத்தில் கொண்ட இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1950-ஆம் வருடம் ஜனவரி 26 இந்தியா குடியரசாக மாறும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 26, 1950-ம் ஆண்டு முதல் குடியரசு நாள் என இந்திய கொடி, கம்பத்தில் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் இந்தியா முழுவதும் கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய மூவர்ண கொடியை ஏற்றி குடியரசு தின கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
நம்முடைய தாய் நாட்டை காப்பதற்கு பல உயிர்களை தியாகம் செய்த தியாகிகளுக்கு நன்றி கூறும் வகையில் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளில் அரசு அலுவலகம் போன்ற இடங்களில் தேசிய கொடியை நாள் முழுவதும் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுவர். ஜாதி, மதம், மொழி என பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இந்தியர்கள் எனக் கொண்டாடுவோம். அன்றைய தினம் நாம் அணியும் உடையில் தேசபக்தியை உணர்கிறோம். எனவே தேசபக்தியை உணர, அன்றைய தினம் மூவர்ண ஆடைகளை அணியுங்கள். உங்கள் ஸ்டைல் விளையாட்டை மேம்படுத்த சில பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்ட மூவர்ண தோற்றத்தைப் பார்ப்போம்:
https://www.instagram.com/p/CL4BPmyJMoo/?utm_source=ig_embed&utm_campaign=loading