ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்காய் 5 லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த குருமூர்த்தியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி உடனடியாக வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.